சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் நிறுவனர் நாள் விழா.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயகர் முதலியார் பள்ளியில் நிறுவனர் நாள் விழா நடைபெற்றது, விழாவிற்கு சபாநாயக முதலியார் இந்து கல்வி கூடங்களின் செயலர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறு) தெட்சிணாமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர்கள் முரளிதரன், துளசிரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார்.
சபாநாயக முதலியார் இந்து கல்வி கூடங்களின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கபாலி. பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் பாலவேலாயுதம், முனைவர் தருமைசிவா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பரமசிவம், முத்துக்கனியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் இணை இயக்குனர் செல்வகுமார் கலந்து கொண்டு நிறுவுநர் நாள் விழாவையொட்டி நடந்த கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை, பாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும். எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாகவும், சிறந்த கவிஞர்களாகவும், ஓவியர்களாகவும் வரலாம். தினசரி நடக்கும் நிகழ்வுகளை டைரியில் எழுதி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் எழுதிய டைரியை திறந்து பார்க்கும் போது, ஒரு பரிணாம வளர்ச்சி தெரியும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து, பெரிய பதவி, பொறுப்புகளுக்கு வர வேண்டும்.
அப்படி வந்தவுடன் படிக்கும் பள்ளிகளுக்கே, சிறப்பு அழைப்பாளர்களாக செல்ல முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்காமல், தன் மீதான கவனத்தை மட்டுமே அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் சிறந்த மாணவர்களாக வரலாம். அதற்காக அதிக புத்தகங்களை படிக்க வேண்டும் என்றார்.
விழாவில் சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு, தெற்கு வீதி பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், மேல வீதி பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் கீழவீதி பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி ,சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, பெஸ்ட் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ராமலிங்கம், சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சுதேஷ், சம்பத்குமார், செல்லம்மாள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்.
No comments