மாத்தூர் ஊராட்சியில் கூரை வீடு தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் பொருட்கள் எரிந்து சேதம் எம்எல்ஏ பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண பொருள்கள் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி ஏரி ஓடை கிராமத்தில் மாரியப்பன் (40). மாரியம்மன் (38) என்பவரது கூரை வீடு தீ விபத்து ஏற்பட்டு முழுவதும் எறிய துவங்கியது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி அனைத்தும் கூரைவீடு முழுவதும் எரிந்து சேரமடைந்தது வீட்டிலிருந்த மின்சாதன பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் பணம் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகைபொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
அதேபோன்று அருகில் உள்ள கோவிந்தம்மாள் என்பவரின் கூரை வீடும் எரிந்து சேதம் அடைந்த நிலையில் அந்த குடும்பத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கினார் அப்பொழுது செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம். மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு துணை தலைவர் காஞ்சனமாலா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
No comments