Breaking News

கந்திலி மேற்கு ஒன்றியத்தில் புதிதாக தார் சாலை அமைக்க பூமி பூஜை எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மானவள்ளி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 196.64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  மானவள்ளி முதல் ஜல்லியூர், தெலுங்கு மட்றப்பள்ளி வரை புதிதாக தார் சாலை அமைக்க பூமி பூஜை மற்றும் பல்லப்பள்ளி கொண்டப்நாயக்கன்பட்டி பகுதியில் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.25 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 3.700 கிலோ மட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக 

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். 

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன்,  துணை சேர்மன் மோகன்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!