பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு மனைகள், விலை நிலங்கள், கட்டிடங்கள் என பல்வேறு இடங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
கோடிக்கணக்கான மதிப்பிலான நிலங்கள் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பத்திரப்பதிவிற்கு அரசு நிர்ணயித்ததை விட அதிக அளவில் பணம் வாங்குவதாகவும் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் தொடர்ந்து எழுந்த புகாரின் பேரில் இன்று பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பத்திர பதிவிற்காக வந்த பொது மக்களை அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து பூட்டி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை காரணமாக எதிரே அமைந்துள்ள ஜெராக்ஸ் கடைகள், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூடிவிட்டு அனைவரும் புறப்பட்டு சென்றதால் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.
No comments