Breaking News

சீர்காழியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கூட்டம். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் கருத்துரை.


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜெக.சண்முகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். செயலர் சாம்சன்.கில்பர்ட் வரவேற்றார். பொருளர் தவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். மனிதநேயம் என்ற தலைப்பில் ஆசிரியர் நடேசன் உரையாற்றினார். 

நமது பகுதிக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம் காவல்துறையின் ஆய்வாளர்  புயல் பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்றய வாழ்க்கை நிலையில் ஒரு மனிதன் எந்தெந்த இடத்தில் எப்படியெப்படி ஏமாற்ப்படுகிறான் அதில் நாம் எந்தளவு  பாதுகாப்போடு வாழவேண்டும் என்பதைப்பற்றி பல்வேறு சம்பவங்களையும், கிளைக் கதைகளையும் சொல்லி அனைவரும் இரசித்துக் கேட்கும்படி  அருமையானதொரு சொற்பொழிவையாற்றினார்.

கூட்டத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது, மயிலாடுதுறை மாநாட்டில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவில் ஆசிரியர் வீரபாண்டியன் நன்றிக்கூறினார்.

No comments

Copying is disabled on this page!