திருச்செந்தூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (42). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா குழந்தை இல்லை. இவர் வீரபாண்டியன்பட்டணம். சண்முகபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த 14ம் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து திருச்செந்தூர், குமாரபுரம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் படுகாயமடைந்து சாலையில் கிடந்துள்ளார்.
இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மூளைச்சாவு அடைந்து கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மனைவி விருப்பத்தின் படி இசக்கிமுத்துவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து உறுப்புகள் தானம் செய்யப்பட்ட அவரது உடல் காயாமொழிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.
அரசு உத்தரவின் பேரில் இசக்கிமுத்துவின் உடலுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், தாசில்தார் பாலசுந்தரம், மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பொன்ரவி, எஸ்.ஐ. பாபுராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments