Breaking News

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு வலுக்கும் கண்டனங்கள்.


சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு வலுக்கும் கண்டனங்கள்; பொதுமக்கள் விவசாய சங்கத்தினரின் எதிர்ப்பை மீறினால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை போஸ்டர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறுக்கு ரோடு பகுதியில் அதிக போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும், அதிக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள பகுதியாகவும் இருந்து வரும் நிலையில், பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும் என பலத்த கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. 


ஆனாலும் அதையும் மீறி  அரசு பணிகளை மேற்கொண்டு வருவதை அறிந்து இப் பகுதியில் உள்ள, கிராம மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கத்தினர் இணைந்து வருகின்ற 11-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியுள்ளது சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. 

No comments

Copying is disabled on this page!