ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தொன் போஸ்கோ கல்லூரியில் ஆய்வு சுட்டுரை எழுதுதல் பயிற்சிப் பயிலரங்கம்.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தொன் போஸ்கோ கல்லூரியில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மதுரை சால்லாக்ஸ் ஆய்விதழ் மற்றும் திருப்பத்தூர் புதிய அவையம் ஆய்விதழ் இணைந்து நடத்திய ஆய்வு சுட்டுரை எழுதுதல் பயிற்சிப் பயிலரங்கம் 3 நாட்கள் நடைபெற்றது. பல்கலைக்கழகம் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 43 க்கும் மேற்பட்ட முனைவர்ப் பட்டம் மாணவர்கள் கலத்துக் கொண்டனர்.
விழா தொடக்கமாக தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பார்த்திபராஜா வரவேற்புரை கூறினார். தலைமையுரையினை தொன் போஸ்கோ கல்லூரியின் இல்லத்தந்தை அருட்தந்தை முனைவர் போஸ்கோ அகஸ்டின் வழங்கினார். கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் ததேயூஸ் வழங்கினார். துணை முதல்வர்கள் அருட்தந்தை பால் ராஜ் மற்றும் முனைவர் ராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
தங்களுடைய சந்தேகங்களையும் தங்கள் கருத்துக்களையும் சிறப்புரையாளர்கள் தங்களுடைய பங்களிப்பினையும் முழு தங்கள் அனுபவங்களையும் கட்டுரைகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்றும் தங்களுடைய முனைவர்ப் பட்ட ஆய்வின் போது ஏற்பட்ட சிக்கல்களையும் அவற்றைக் களையும் விதத்தையும் எடுத்து விளக்கி கூறினார்கள்.
No comments