Breaking News

காரைக்கால் பார்வதீஸ்வன் தேவஸ்தான நில மோசடி விவகாரம். சி.பி.ஐ விசாரணை கோரி இந்து முன்னணி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.


காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பார்வதீஸ்வரன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 3 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை அறுபது பிராட்டுகளாக பிரித்து பல்வேறு நபர்கள் பெயரில் அரசு மனை பட்டாவாக போலியாக தயாரித்து முயற்சித்து இருப்பதாகவும், இதனைக் கண்டித்து இந்து முன்னணி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கோவில் நிலத்தை விற்க முயற்சித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் நிலவணிகர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நில மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து கடந்த மே மாதம் பார்வதி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியிடம் இந்து முன்னணி மனு அளித்திருந்ததாகவும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் அவர் எடுக்காததால் அவரை உடனடியாக அந்த பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Copying is disabled on this page!