Breaking News

புதுச்சேரி உருளையன்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணி துவக்கம்.


புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அரசு குடியிருப்புகள் உள்ளன, குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணி மற்றும் தரைதளம் டைல்ஸ் அமைத்தல் உடைந்து குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் புதிதாக மாற்றுதல் போன்ற பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் குறித்து ஆலோசனை உருளையன்பேட்டை  தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி  தலைமையில் 20.09.2024....இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  நடைபெற்றது... மேலும் ஆலோசனைகள் அப்பகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளை விரைவாக முடித்து கொடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் மேலும் ஆலோசனையின் போது ஸ்மார்ட் சிட்டி திட்ட (சிடிஸ்) தலைமை அதிகாரி புகழேந்தி உதவி பொறியாளர்கள் ரவிச்சந்திரன், அணில் குமார் இளநிலை பொறியாளர்கள் உதயகுமார், பாஸ்கர் மற்றும் ஒப்பந்ததாரர் என பலர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!