கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்திருந்த கடைகள், இருசக்கர வாகனங்களை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி அகற்றம்.
சுற்றுவட்டார பகுதி கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் காவேரிப்பட்டணம் நகருக்கு வந்து செல்வதால் பொதுமக்கள் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பாலகோடு, ஒகேனக்கல், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்களும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு பணிக்கு செல்லும் அலுவலர்கள் என அனைவரும் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுவதற்காக அமைக்கப்பட்ட நடைமேடைகளில் தள்ளுவண்டி கடைகள், தலைச்சுமை கடைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்த முடியாமல் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிழல் கூடம், பயணிகள் அமர இருக்கைகள் வேண்டுமென பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனை அடுத்து காவேரிப்பட்டணம் பேரூராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம் அருகே ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி வணிக வளாகத்திற்கு பேருந்தை மட்டும்தான் நிறுத்த வேண்டும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நிறுத்தக்கூடாது என்று மீறி நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி பேருந்துகளை பேருந்து நிலையத்தில் நிற்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மீறி பேருந்து நிலையம் வளாகத்திற்குள் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து பேருந்து நிலையத்தை பேருராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளதால் பொதுமக்கள் பயணிகள் மகழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments