ஓசூரில் மழைக்கால மற்றும் தீபாவளி பண்டிகை கால, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் துறையின் சார்பில் பருவ மழை வெள்ளம் மற்றும் தீபாவளி பண்டிகை நேரங்களில், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்புத் துறையின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சியில், மழைக்காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளம் போன்ற பேரிடர் நேரங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் அதிலிருந்து மீட்பது எவ்வாறு என்பது குறித்து நிகழ்த்தி காட்டப்பட்டது.
மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஏராளமான பட்டாசு கடைகள் செயல்படுத்த தொடங்கியுள்ளன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து அதில் சிக்கி உள்ளவர்களை மீட்டெடுப்பது குறித்து ஒத்திகையானது செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பங்கேற்று பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக விளக்கங்களும் அளித்தனர்.
No comments