செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகள் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்திரன் (TBML) கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ் நாடு கிளையின் வழிகாட்டுதலின் படி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட, யூத் ரெட் கிராஸ் சார்பாக மாவட்ட அளவிலான ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளை கல்லூரி முதல்வர் முனைவர்.S.ஜான்சன் ஜெயக்குமார் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி தொடங்கி வைத்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கிளையின் சேர்மன், செயலர் பொருளாளர் & மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 16 கல்லூரிகளிலிருந்து 166 மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். பேராசிரியர்.Dr.தாமரைச்செல்வி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளார்.
பேச்சு போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கட்டுரை போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்), ஓவியப்போட்டி, வினாடி வினா மற்றும் கலைநிகழ்ச்சி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளரும் TBML கல்லூரியின் வேதியியல் துறை தலைவருமான பேராசிரியர். முனைவர்.G.V. பாண்டியன் சிறப்பாக செய்திருந்தார்.
கல்லூரியின் பேராசிரியர்கள் திரு.J.செல்வராஜ், Dr.B. புகழேந்தி, Dr.P.கோபிநாதன், Dr.மதுமிதா ஸ்ரீ, Dr.J.ஸ்ரீதர் தங்கதுரை, Dr.A.செல்வம், திரு.J.ராம்கி, Dr.M.ஜியாவுதீன், திருமதி.K.கலைவாணி, திரு.அருள் மற்றும் திரு.பால் ஏங்கல்ஸ் ஆகியோர்கள் நடுவர்களாக பங்கேற்று சிறப்பான தீர்ப்புகளை வழங்கினார்கள்.
No comments