திருவள்ளூரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை இடித்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய்த்துறையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்து இருந்தனர். அதில் அதிமுக நிர்வாகி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 48 கோடி மதிப்பிலான 44 சென்ட் நிலத்தை கடந்த ஜனவரி மாதம் வருவாய்த் துறையினர் மீட்டிருந்தனர்.
மேலும் அப்பகுதியில் 2 கோடி மதிப்பிலான 6 சென்ட் நிலத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற பெயரில் ஓய்வூதியர் சங்கம் கட்டிடம் கட்டி அதில் ஜெராக்ஸ் கடை உள்ளிட்டகைகளுக்கு 30 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்டு வந்திருந்தனர். இந்நிலையில் அத்தகைய ஆக்கிரமிப்பு கட்டடத்தை திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றி அரசு நிலத்தை மீட்டனர்.
அதேபோன்று மாவட்டம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments