திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசான தூறல் மழையும் திடீரென ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசான தூறல் மழையும் திடீரென ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் நீடித்து வந்தது.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நேற்று திடீரென இடி மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியபோது கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையானது திருவள்ளூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 55 எம் எம் மழை பதிவாகியது.
நெற்பயிர் முற்றி கடந்த 15 நாட்களாக அறுவடை செய்து வரும் நிலையில் அறுவடை நேரத்தில் பெய்த இந்த கனமழையால், ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெல் பயிர்கள் பயிர் நிலத்தில் சாய்ந்து சேதமாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் வரலாற்று ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
No comments