Breaking News

புரட்சி பாரத கட்சியின் முன்னாள் நிறுவன தலைவர் பூவை எம். மூர்த்தியாரின் 22 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம்.


மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மறைந்த புரட்சி பாரத கட்சியின் முன்னாள் நிறுவன தலைவர் பூவை எம். மூர்த்தியாரின்  22 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளர் நல சங்கம் மீஞ்சூர் நகர புரட்சி பாரதம் கட்சி சார்பில் புரட்சி பாரத கட்சியின் முன்னாள் நிறுவன தலைவர் பூவை எம். மூர்த்தியார் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளர் நல சங்க மீஞ்சூர் நகர தலைவர் புரட்சி பாரதம் என். சுரேஷ் தலைமை தாங்கி அன்னதானம் வழங்கும் ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்.  


நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  ஏ.பி.எல். எஃப் மாவட்ட தலைவர்  என். பிரபாகரன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் வல்லூர் ப. செல்வகுமார்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். 


இந்த நிகழ்ச்சியில் ஜி.புஷ்பராஜ், சி. பாலாஜி, எம்.நாகராஜ், சந்திரன், கணேசன், கண்ணன், சுரேஷ், முருகன், பெருமாள், கண்ணன், பாலாஜி, வரதன், சதீஷ், சீனிவாசன், பாஸ்கர், மகளிர் அணி நிர்வாகிகள் ஜே.சுமதி ,கௌரி, கோமதி, சாந்தி, மற்றும் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளர் நல சங்கம் நிர்வாகிகள் மீஞ்சூர் நகர புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!