Breaking News

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலையில் குவிந்த பக்தர்கள்.


புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலையில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை வழிபட்டனர்.


புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள்தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானது என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய சனிக்கிழமை ஏகாதசி திதியுடன் இணைந்து வருகிறது. அதனால் இன்றைய தினம் பெருமாளுக்கு மிகவும் சிறப்புக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில் தான் பரிகலாசுரன் என்னும் அசுரனை வதம் செய்த லட்சுமி நரசிம்மர் மூலவராக அமைந்துள்ளார். 

பல்வேறு மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் இக்கோவிலில் உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் சிலை உள்ள ஒரே திருத்தலம் இக்கோயில் விளங்குகிறது. இந்நிலையில் இன்று காலை  முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  

மட்டுமல்லாமல் பரிக்கலை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில்  இருந்தும் ஏராளமான பொதுமக்கள் லட்சுமி நரசிம்மர்  ஆலயம் நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர். துளசி இலை மாலையை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி பெருமாளுக்கு சாத்தி வழிபட்டு வந்தனர் .

No comments

Copying is disabled on this page!