புதுச்சேரி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சக செயலாளரிடம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள மத்திய உள்துறை செயலர் கோவிந்மோகனை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அளித்துள்ள மனுவில், புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்,உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும்,15 ஆண்டுகளாக அமுல்படுத்தாத மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்,மின்துறை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மாநில வளர்ச்சிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது மாநில பொருளாளர் ரவிபாண்டுங்கள், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments