Breaking News

சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்போம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அரசியல் நடத்தும் திமுகவினர் கிறிஸ்தவ, முஸ்லீம் சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் உள்ள முற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை போலீயாக எதிர்ப்பது ஏன்? என புதுச்சேரி அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.


புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், முற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் போது அதை இந்தியாவில் எதிர்த்த ஒரே முதலமைச்சர் எங்களது அதிமுக ஆட்சியின் முதலமைச்சராக இருந்த  எடப்பாடியார் ஆவார்.

ஆனால் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சராக இருந்த  நாராயணசாமி ஆட்சியில் இந்த சட்டம்  அமல்படுத்தப்பட்டது.  சமூக நீதிக்க எதிரான ஒன்று என்றும், உயர் கல்வியில் இடஒதுக்கீட்டில் உள்ள மக்களை வஞ்சிக்கும் செயல் என அதிமுக எடுத்துரைத்தோம். இவை அனைத்தையும் திமுகவினர் மூடி மறைத்துவிட்டு இந்த சட்டத்தை ஏதோ குறிப்பிட்ட சில அதிகாரிகள் புதுச்சேரியில் அமல்படுத்தியதாக தற்போது வாய்க்கு வந்தபடி வசைபாடி வருகின்றனர்.திமுகவின் திசை திருப்பும் இந்த நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஏதே ஓன்று இரண்டு ஜாதிகள் மட்டும் இதில் உள்ளதாக தவறான தகவலை திமுக கூறுவது கண்டித்தக்கதாகும். திமுகவின் இந்த இரட்டை வேடத்தை கிறிஸ்தவ, முஸ்லீம் சமுதாய மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்போம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அரசியல் நடத்தும் திமுகவினர் கிறிஸ்தவ, முஸ்லீம் சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் உள்ள முற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை போலீயாக எதிர்ப்பது ஏன். இதற்கு புதுச்சேரி மாநில அமைப்பாளர் பதிலளிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

No comments

Copying is disabled on this page!