Breaking News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம்.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

அவர் மூலவர், உற்சவர், தெட்சினாமூர்த்தி உள்பட சுவாமிகளை தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் பல்வேறு முறை இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். 

ஆனால் பிரதமர் அதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அதோடு புதுச்சேரியில் நான் முதல்வராக இருந்தபோது ஆளுநர் கிரன்பேடி என்னை பணி செய்ய விடாமல் தடுத்து போல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வரை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார். 


புதிதாக கட்சி தொடங்க கொடி அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். புதுச்சேரி முதல்வர் தடம் மாறி போகிறார். பாஜக அவரை கைவிட்டு விட்டது. இதில் சேர்ந்தாவது கரை சேர்ந்து விடலாம் என அவர் நினைக்கிறார். அவர் கட்சி மாறுகிற வேலையை பார்க்கிறார். 

தமிழகத்தில் நடிகர்கள் கட்சி தொடங்குவது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் மட்டுமல்ல சிரஞ்சிவி கட்சி தொடங்கினார். கர்நாடாகவிலும் பல நடிகர்கள் கட்சி தொடங்கினார்கள். தமிழகத்தில் விஜயகாந்த் போன்றோர் கட்சி ஆரம்பித்தார். 

தமிழகத்தில் எம்.ஜி.ஆரை தவிர வேறு யாரும் கட்சி ஆரம்பித்து நிலைக்கவில்லை. சில காலம் சில சட்டமன்ற உறுப்பினர்கள் வந்த பிறகு காணாமல் போய் விடுவார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் எந்த பிரச்சனையும் தங்களுக்கு ஏற்பட போவதில்லை. மக்கள் நடிகர்களை பார்த்து ஓட்டுபோட மாட்டார்கள். 

சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பது குறித்து கேட்டதற்கு தான் அதிகமாக சினிமா பார்ப்பது கிடையாது என்றார். சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பது குறித்து கேட்டதற்கு, பெண்களுக்கான வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அவர் கூறினார். 


- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்

No comments

Copying is disabled on this page!