Breaking News

கயத்தார் அருகே கல்குவாரி அமைப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பது கூட்டம் - கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் அருகே உள்ள செட்டி குறிச்சி கிராமத்தில் ஊருக்கு மேற்கே புதியதாக கல்கோரி அமைக்க கடந்த 2022 ஆண்டு கழுகுமலையை சேர்ந்த கந்தசாமி என்பவர்  விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

இது தொடர்பாக  செட்டி குறிச்சி சிதம்பரம் பட்டி ஆகிய பஞ்சாயத்தில் அடங்கிய உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களிடம் கயத்தாரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்பட அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த  கருத்து கேட்பு கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஏற்கனவே செயல்பட்டு வரும் கல் குவாரிகளால் தங்களது விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் கல்குவாரி அமைக்கப்பட்டால் தங்களது பகுதி முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் கல்குவாரி அமைக்க கூடாது என்று பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!