மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 457 மனுக்கள் பெறப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை சார்ந்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை கோருதல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கோருதல், வங்கி கடன் கோருதல், உபகரணங்கள், கலைஞர் உரிமைத்தொகை கோரி மனு, தொழிற் கடன் வழங்க கோருதல், உள்ளிட்ட சுமார் 457 மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ30 ஆயிரக்கணக்கான காசோலைகளையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு கண் கண்ணாடி மற்றும் மடக்கு குச்சியினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்தான கிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் ரவி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, மாவட்ட வளங்கள் அலுவலர் பானு கோபன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments