சிவகங்கையில் தற்காலிக பணி நீக்கம் மற்றும் பணியிட மாறுதலை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
சிவகங்கையில் தற்காலிக பணி நீக்கம் மற்றும் பணியிட மாறுதலை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம். அமைச்சர்கள் சிவகங்கை மற்றும் மதுரையில், மாவட்ட ஆய்வுக்கூட்டங்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்று பதில் அளித்த காரணத்திற்காகவும், கடுமையான பணிச்சுமைகளின் மன அழுத்ததின் காரணமாகவும் உரிய பதில் அளிக்காத நிலையினை கருத்தில் கொள்ளாமல் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு வி. சோமதாஸ், மாவட்ட நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதும், மதுரை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரின் திருமதி சி. கீதா பணியிட மாறுதல் நடவடிக்கைகளும் வளர்ச்சித்துறை ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, இது போன்ற நிர்வாக நடவடிக்கைகள் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதைக் கருத்திற்கொண்டும், அவர்களின் பணிநீக்கம் மற்றும் பணியிட மாறுதலையும் உடனே ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்தி மாநிலந்தழுவிய வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சிவகங்கை மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் வட்டாரங்கள் பின்வருமாறு, மானாமதுரை - செந்தில் குமார், திருப்பத்தூர் - சேதுராமன், தேவகோட்டை - கண்ணன், எஸ்.புதூர் - இராஜேஸ்வரன், சிவகங்கை - இரமேஷ், சாக்கோட்டை - சுந்தரம், திருப்புவனம் - கருப்புராஜா, சிங்கம்புனரி - ஷேக் அப்துல்லா, கண்ணங்குடி - முருகேசன், காளையார்கோவில் - பாலசங்கர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - சந்தான கோபாலன் ஆகிய தோழர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தின் முழு விவரங்கள் பின்வருமாறு, "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள், போதிய கால அவகாசங்கள் வழங்கப்படாமலும், உரிய பணியிடங்கள் வழங்கப்படாமலும் மேற்கொள்ள ஊழியர்கள் மீதான கடுமையான பணி நெருக்கடிக்களை தமிழக அரசும், நிர்வாகமும், கண்மூடித்தனமாக திணித்து வருகிறது.
குறிப்பாக, வீடுகள் கட்டும் திட்டங்களில் பயனாளர்களின் சிரமங்களை கருத்திற் கொள்ளாமல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகள் அனைத்தையும் நூறு சதவீகிதம் துவக்கப்பட்டு, முதல் பட்டியல் குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதும், பணிகள் துவங்கப்பட்டதா? இல்லையா? என்பதை கருத்தில் கொள்ளாமலேயே, சிமெண்ட் மூட்டைகள் வழங்க வேண்டும், இரும்பு கம்பிகள் வழங்க வேண்டும் என்ற கடுமையான நிர்பந்தங்கள் மாநிலம் முழுவதும் பணியாற்றி வரும் அனைத்து நிலை அலுவலர்களையும் கடும் இன்னல்களுக்கு உள்ளாக்குகிறது.
PMAY திட்டச்செயலாக்கம் சார்பாக வளர்ச்சித்துறையின் கடந்தகால காட்டுமிராண்டித்தனமான நிர்வாக நடவடிக்கைகளால் பலநூற்றுக் கணக்கான அப்பாவி வளர்ச்சித்துறை ஊழியர்கள் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டு, விழிப்புத்துறை, காவல்துறை மற்றும் கடுங்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டு மனவேதனையில் தவிப்பதும், பணி ஓய்வு நாளில் தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் வேறு எந்த துறையிலும் இல்லாத மனித நேயமற்ற அவலமான நிலையாக உள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் இத்தகைய ஊழியர் விரோத நடவடிக்கைகளை பல்வேறு தருணங்களில் தமிழக அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு, உயர் அலுவலர்களின் நேரடி கவனத்திற்கும் கொண்டு சென்று தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசு மீண்டும் KKI, RRH உள்ளிட்ட திட்டங்களையும், கள நிலைமைகளை புரிந்து கொள்ளாமலேயே பணி முன்னேற்ற அறிக்கைகளை அளிக்க, மேற்கொண்டு வரும் பல்வேறு கடுமையான நிர்பந்தங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதோடு, சாத்தியமற்ற இலக்குகளை எய்த வேண்டி மாநில அளவில் தரவரிசை மேற்கொள்வதும், அதையொட்டிய ஆய்வுகளும் ஊழியர்களுக்கு கடுமையான மன உளச்சலை அளிப்பதோடு, வளர்ச்சித்துறையின் மாவட்ட உயர் அலுவலர்களும், கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகப்படுவதும் மேன்மேலும் கொதிநிலையினையே ஏற்படுத்துகிறது.
மேலும் மாநில அரசின் சிறப்புத்திட்டங்கள் என்ற பெயரில் பிறதுறை பணிகளை மேற்கொள்ளவும், நிதி ஒதுக்கீடுகளே இல்லாத நிலையில் பணிகளை மேற்கொள்ளவும் நிர்பந்திப்பது, போன்ற தமிழக அரசின் நடவடிக்கைகள் ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தினை ஏற்படுத்தி வருகிறது என்பது இந்த ஆர்ப்பாட்டத்திற்கான நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது".
இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாக தோழர்கள் பின்வருமாறு மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் இராதா கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் லூயிஸ் ஜோசப் பிரகாஷ், தனபால், கார்த்திக் மற்றும் குமரேசன், மாவட்ட இணைச் செயலாளர்கள் செந்தில் பெரியசாமி, பாண்டி மற்றும் இராம்நாத் பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமது ஆகிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments