Breaking News

அண்ணா திருமண மண்டபத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு திறந்து விடக் கூறி சித்தர் காடு பகுதி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.


மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் இயங்கி வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு திறந்து விடக் கூறி சித்தர் காடு பகுதி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. சுமார் 70 ஆண்டுகாலம் ஏழை எளிய மக்களின் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு மிகக் குறைந்த அரசின் கட்டணத்தில் இந்த திருமண மண்டபம் செயல்பட்டு வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தின் 38 வது மாவட்டமாக  மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை நகரில் இயங்கி வந்த வணிகவரித் துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டது. வணிகவரித்துறை அலுவலகம் சித்தர் காடு அண்ணா திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. 


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய  கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் வணிகவரித்துறை கட்டிடம் தொடர்ந்து அதே திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு  மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. 


மிகுந்த பொருட்செலவும், தூரமாகவும் செல்ல வேண்டி இருப்பதால் வணிகவரித்துறை அலுவலகத்தை மீண்டும் பழைய கட்டிடத்திற்கு கொண்டு செல்வதுடன் அண்ணா திருமண மண்டபத்தை காலி செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று கிராமவாசிகள் வணிகவரித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Copying is disabled on this page!