Breaking News

பட்டா இடத்தை அளக்க செய்யாமல் அலையவிட்ட தாசில்தார்.


பட்டா இடத்தை அளவீடு செய்யாமல் அலைகழிப்பதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர் அவர் கோரிக்கை ஏற்று உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்.



மயிலாடுதுறை அருகே குத்தாலம் தொழுதாலங்குடி காமராஜர் காலணியை சேர்ந்தவர் அழகர்சாமி. 60 வயது முதியவர் மாற்றுத்திறனாளியான  இவருக்கு அரசால் வழங்கப்பட்ட பட்டா எண்.11ல் உள்ள இடத்தை அளவீடு செய்துகொடுக்க வேண்டுமென்று குத்தாலம் தாலுகா அலுவலகத்தில் மனுசெய்துள்ளார். அளவீடு செய்வதற்கு சர்வேயர் பிரிவில் இருந்து அலுவலர்கள் வந்தபோது இவரது வீட்டிற்குஅருகே வசிக்கக்கூடிய சிலர் பிரச்னை செய்ததால் அளவீடு செய்யாமல் சென்றுள்ளனர். இது குறித்து அழகர் பலமுறை மனுஅளித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மயிலாடுதுறைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சியரின் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு வந்த முதியவர் அழகர்சாமி திடீரென்று அலுவலகம் வளாகத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தால் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினார். தன் இடத்தை அளவீடு செய்யவிடாமல் தடுப்பவர்களிமீது நடவடிக்கை எடுத்து அளவீடு செய்துதர வேண்டும் என்று கூறினார். 


உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.

No comments

Copying is disabled on this page!