உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அகில இந்து மகா சபை ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தை புறவழி சாலையில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போதுள்ள இடத்திலேயே பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகர்த்தி விரிவாக்கம் செய்து பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொது செயலாளர் பெரி.செந்தில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர் சென்னை திருச்சி நான்கு வழி சாலையின் ஓரமாக புறவழி சாலை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைத்தால் பொதுமக்கள் சென்று வர பெரும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் நகரத்தின் மையப் பகுதியில் உள்ளதால் தற்போது பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே அதனை சுற்றி உள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்து பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தனிநபர்களின் விலை நிலங்கள் மதிப்பு கூடுவதற்காக புறவழி சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments