திருச்செந்தூர் நகராட்சி தோப்பூர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்.
திருச்செந்தூர் நகராட்சி தோப்பூர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி நகராட்சியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு. போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டி நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் சென்று கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி உட்பட்ட 28 வார்டுகளில் வரும் சாக்கடையை சுத்திகரிப்பதற்காக தோப்பூர் பகுதியில் கடந்த 2018 ஆண்டு 14 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த பாதாள சாக்கடை சுத்திகரிப்பு திட்டத்தால் தோப்பூர் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாலும் இந்த பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை இடம் மாற்றம் செய்து தரக்கோரி தோப்பூர் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை இடம் மாற்றம் செய்து தரக்கோரி இன்றைய தினம் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக நகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புவேலி தாண்டி நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் சென்றனர். இதைத் தொடர்ந்து பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி அலுவலக வளாகத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments