Breaking News

பொறையார் பகுதியில் கடைகளில் பேரூராட்சி சார்பில் பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை உள்ளதா என ஆய்வு நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதிலும் சுகாதாரத்துறை வருவாய்த்துறை உள்ளாட்சி துறைகளின் சார்பில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கடைகளில் சந்தை பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் பகுதியில் இன்று தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலக பணியாளர்களால் பொறையார் பகுதியில் உள்ள இறைச்சி கடை மளிகை கடை காய்கறி மற்றும் பல கடைகளில் ஆய்வு நடைபெற்றது தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் உள்ளதா எனவும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஒவ்வொரு கடையிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தடை செய்யப்பட்ட பாலத்தீன் பைகள் விற்பனை செய்யக்கூடாது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கக் கூடாது என தடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தினர். 

No comments

Copying is disabled on this page!