Breaking News

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினர்.

மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்  பேசிய போது: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்தில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு ஆர்வம் ஊக்குவிக்கும் வகையில் மற்றும் அவர்களின் திறன் கண்டு பயிற்சி அளித்து மாநில அளவு, தேசிய அளவில் பங்கேற்க உதவும் வகையில் 33 விளையாட்டு உபகரணங்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. 

நமது மாவட்டத்தில் 5 வட்டாரங்களிலுள்ள 241 கிராம பஞ்சாயத்திற்கு 311 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கப்படுகிறது. இதனை கிராம பஞ்சாயத்தில் வசிக்கும் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி விளையாட்டில் பல சாதனைகள் செய்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். 

மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான 57   வகையான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் சிறப்பான முறையில் 10.09.2024 முதல் 24.09.2024 வரை ஆகிய நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு அதிக அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்து தமிழக அளவில் நமது மாவட்டம் 28,404 பதிவு எண்ணிக்கையை கொண்டு 13 வது இடத்தை பிடித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்தப்பட்டதில் பள்ளி பிரிவில் 5789 மாணவ, மாணவிகளும், கல்லூரி பிரிவில் 3570 மாணவ, மாணவிகளும், பொது பிரிவில் 2115 வீரர், வீராங்கனைகளும், அரசு ஊழியர் பிரிவில் 362 வீரர், வீராங்கனைகளும் மற்றும் 128 வீரர், வீராங்கனைகளும் மொத்தம் 11,964 வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர். இதில் முதலிடம் 733 வீரர்களும், இரண்டாமிடம் 732 வீரர்களும், மூன்றாமிடம்; 710  வீரர்களும்; பெற்றுள்ளனர். 

இந்த ஆண்டில் மாவட்ட அளவில் நடந்த முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெற்றவர்களில் முதல் பரிசு தலா ரூ.3000-மும், இரண்டாம் பரிசு தலா ரூ.2000-மும், மூன்றாம் பரிசு தலா ரூ.1000-மும்  வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு விளையாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,  மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் , நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் , நகர்மன்ற உறுப்பினர் கீதா செந்தில்முருகன்  மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் பொறுப்பு அலுவலர் பெ.மணிவாசகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வை.உமாநாத், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு  ஆகியோர்  கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!