Breaking News

சீர்காழி அருகே தவறான சிகிச்சை அளித்ததால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்.


சீர்காழி அருகே கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழவள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (48) என்பவர் நெஞ்சு வலி காரணமாக காலை கொள்ளிடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  உறவினர்கள் இருசக்கர வாகனம் மூலம் அழைத்துவந்து  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு சிகிச்சை பயனில்லாமல் உயிரிழந்தார் என மருத்துவமனை சார்பாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை மூடக்கோரியும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை முன்பு கிராம மக்கள் உறவினர்கள்  திடீர் சாலை மறையலில் ஈடுபட்டனர்.  


தகவலறிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆணைக்காரசத்திரம்  போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கொள்ளிடம்- சீர்காழி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இறந்தவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளது குறிப்பிடதக்கது.

No comments

Copying is disabled on this page!