Breaking News

முன்னாள் படைவீரர்கள் வாரிசுகள் பிரதம மந்திரியின் கல்வி உதவிதொகை பெற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதுடெல்லி, மத்திய முப்படைவீரர் வாரியம் வாயிலாக முன்னாள் படைவீரர்களின் களுக்கு வழங்கப்படும் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டம் 2024-2025ஆம் ஆண்டிற்கு அலுவலர் பதவிக்கு கீழ் ஜேசிஓ பதவிவரை பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.  

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்.  2024-2025ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும். 

இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 30.11.2024 இறுதி நாளாகும். www.ksb.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை அனைத்து அசல் ஆவணங்களுடன் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர்கள்நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

No comments

Copying is disabled on this page!