செங்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி ஊராட்சியின் தலைவராக இருந்து வருபவர் முருகன் ஒன்பது வார்டு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் அண்ணாமலை இந்த நிலையில் கிராம ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் செய்வதில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வளர்ச்சி பணிகளை செய்து வரும் பொழுது அதற்கு துணைத் தலைவர் அண்ணாமலை என்பவர் வளர்ச்சி பணிகள் செய்ய விடாமல் தடுப்பதாகவும் முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஊராட்சியில் உள்ள செங்குறிச்சி மற்றும் நைனாகுப்பம் கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி பணிகளை செய்ய முடியவில்லை என்றும் அதனால் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார் இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் முருகன் கூறியுள்ளார்.
செங்குறிச்சி ஊராட்சிக்கு வளர்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்ச்சி பணிகள் செய்து வருவதாகவும் அதற்கு எதிராக செயல்படும் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு ஆதரவாக அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செயல்படுவதாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments