புதுச்சேரியில் அதிக மின் இழப்பு, கட்டண வசூல் குறைவு காரணம் காட்டி தனியார் மயமாக்கம் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் எம்பி, கடந்த காங்., ஆட்சியில் 97.72 சதவீதமாக இருந்த மின்கட்டண வசூல், தற்போது 92.35 சதவீதமாக குறைந்துள்ளது. 2021ல் ரூ. 23 கோடியாக இருந்த மின் இழப்பு தொகை, கடந்த 2022-23ல் நிர்வாக சீர்கேட்டால் ரூ. 131 கோடியாக உயர்ந்துள்ளது.
மின் கட்டண வசூல் குறைந்ததால், மின்துறை நஷ்டத்தை ஈடுகட்ட தனியார் மயமாக்குவது கட்டாயம் என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனியார் தொழிற்சாலைகள் கட்ட வேண்டிய பல கோடி பாக்கி தொகை, கூடுதல் கட்டணம் என பொதுமக்கள் பில்லில் சேர்த்து வசூலிக்கின்றனர்.
செயற்கையாக கட்டண வசூல் இழப்பு, மின் இழப்பு ஏற்படுத்தி தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரி வரும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், முதல்வர் ரங்கசாமி மின்துறை தனியார் மயமாக்க கூடாது என, அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்றார்.
No comments