Breaking News

உளுந்தூர்பேட்டை பாதூர் அய்யனார் கோவிலில் பூரணி பொற்களை திருவிழா.


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் அய்யனார் கோவிலில் பூரணி பொற்களை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து  ரூபாய் நோட்டுகள் தானியங்கள் காய்கறி உள்ளிட்ட தங்கள் நிலத்தில் விளைந்த விலை பொருட்களை அய்யனாருக்கு சூறையிட்டு தங்களது நேர்த்தி கடனை  நிறைவேற்றினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் புகழ்பெற்ற அய்யனார் கோவில் உள்ளது இந்த கோவிலில் பூரணிப் பொற்களை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு வெள்ளை குதிரை வாகனத்தின் மீது அய்யனாரை வண்ண மலர்களால் அலங்கரித்து முக்கிய வீதிகளின் வழியாக பாரி அடிக்கும் திருவிழா நடைபெற்றது இதில்  இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது அன்று முதல் தினசரி மாலை நேரங்களில் அய்யனார் மலர்களால் அலங்கரித்த வெள்ளை குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெற்று வந்தது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாரியடித்தல் விழா நடைபெற்றது.


அப்போது அய்யனாருக்கு  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புறவை குதிரை ஒன்று புறப்பட்டது அதனைத் தொடர்ந்து அய்யனார் தனது வெள்ளை  குதிரை வாகனத்தில் மலர்களால் அலங்கரித்து பாரி அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது கோவிலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புறவை குதிரையும், மற்றொரு குதிரை வாகனத்தில் அய்யனாரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெள்ளோட்டமாக ஓடி வந்து ஏரிக்கரையில் பாரியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்தப் பாரியடிக்கும் நிகழ்ச்சி வெள்ளை குதிரையில் அமர்ந்த அய்யனாரை பக்தர்கள் அனைவரும் தங்களது தோளில் சுமந்தவாறு தூக்கிச் சென்று பாரி அடிப்பது இதன் சிறப்பு அம்சமாகும் அப்பொழுது புறவைக் குதிரையும்,குதிரை வாகன அய்யனாரையும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு பக்தர்கள் தங்களது தோளில் சுமந்தவாறு ஏரியில் ஆவேசமாக ஓடி துள்ளிக்குதித்து விளையாடினர் அப்பொழுது ஏராளமான பக்தர்கள் வேண்டுதலின் பேரில் பணம் மற்றும் தங்கள் விளை நிலங்களில் விளைந்த விளை பொருட்களான தானியம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூறையிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 


இறுதியாக கோவிலுக்கு சென்ற அய்யனாரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.இந்த திருவிழாவில் பாதூர், காந்திநகர்,கல்பாதூர், செங்குறிச்சி, வண்டிபாளையம், சின்னகுப்பம், ஒரத்தூர், கிள்ளனூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இவ்விழாவில் திருநாவலூர்  காவல்துறையை சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!