Breaking News

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே தோனிரேவு, ஜமிலாபாத் சாலை துண்டிக்கும் நிலையில் இருப்பதால் பொன்னேரி எம்எல்ஏ.துரை.சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு.


திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இருந்து தோனிரேவு, ஜமீலாபாத், செஞ்சியம்மன் நகர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை கடந்த வடகிழக்கு பருவமழையின் போதும் மிக்ஸாம் புயலின் போதும் வெகுவாக பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய வகை மேம்பாலத்தில் துளை ஏற்பட்டு பெரிய விரிசலாகி சாலையின் பாதி தூரம் வரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதேபோன்று இரண்டு இடங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டு சாலை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு கிடைத்த தகவலின் படி அப்பகுதிக்கு நேரில் சென்ற எம்.எல்.ஏ பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பழவேற்காடு பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கும் இடத்தில்  ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து தக்க அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருகின்ற வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் தொடரும் எனவும் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது அவருடன் மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், தோனிரேவு கன்னி முத்து,அத்திப்பட்டு புருஷோத்தமன், கோட்டைக்குப்பம் ஜெயராமன், பழவை ஜெயசீலன், ராஜீவ் காந்தி, சுகு ஜமீலாபாத் கிராம நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!