புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் விரட்டக்கூடாது என, முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார்.
இதில் கலந்துகொண்ட முதல்வா் ரங்கசாமி புதிய காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டாா். இதையடுத்து, பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், புதுவை காவல் துறையானது தற்போது மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறது. காவல் துறையினா் சுறுசுறுப்பாக பணியாற்றும் போதுதான் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.காவல்துறைக்கு பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. இதற்கு தான் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. புதுச்சேரி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.காவல் துறையை சேர்ந்தவர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்பவர்களாக இருக்க வேண்டும். விரட்டி விடுபவர்களாக இருக்கக்கூடாது' என்றார்.
இந்த விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், அரசுச் செயலா் பத்மா ஜெய்ஸ்வால், காவல் துறை டிஜிபி ஷாலினி சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
No comments