புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளில் குட்கா உட்பட போதைப் பொருட்களை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சொகுசு கார் மூலம் குட்கா உட்பட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிளியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கிளியனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதுச்சேரி பதிவின் கொண்ட சொகுசு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.அதில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ எடையுள்ள குட்கா, பான் மசாலாக்கள் உட்பட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ஓட்டுநர் உட்பட இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், புதுச்சேரியை சேர்ந்த சபரிஷ் மற்றும் கணேஷ் பாஸ்கரன் என்பது தெரிய வந்தது. மேலும், போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments