தூத்துக்குடியில் சாலையோரங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி கனிமொழி எம்.பி. துவங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மரக்கன்று நட்டனர்.
அவரை தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், டவுண் ஏஎஸ்பி. மதன் சப்-கலெக்டர் பிரபு உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டனர்.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நிழல் தரும் மரங்கள் மற்றும் பசுமையான மாநகரமாக திகழும் வகையில் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக மாநகராட்சிக்குட்ட 15 வார்டுகளில் வாகை, புங்கை, இலுப்பை, ஆலமரம், நாவல், பூவரசு, மகாகனி, வேம்பு உள்ளிட்ட 23 வகையிலான மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டலத் தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், வட்டச்செயலாளர் பொன்பெருமாள், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகரன், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments