பாகூர் குடியிருப்பு பாளையம் வாய்க்கால் அருகே பனை விதைகள் நடும் பணியினை லட்சுமி காந்தன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தனசுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகூர் குடியிருப்பு பாளையம் வாய்க்கால் அருகே பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தன் கலந்து கொண்டு பானை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாகூர் குடியிருப்பு பாளையம் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments