பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்ட்டியிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது காலை ஐந்து மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்பு தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக உற்சவமூர்த்தி கோவிலில் இருந்து பல்லக்கில் கொண்டு வரப்பட்டு தலைமை குருக்கள் பிச்சை குருக்களின் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் அங்குசதேவர், அஸ்திதேவர் சிலை 3 தடவை முக்கி எடுக்கப்பட்டு அதில் உள்ள நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது, இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து சென்றனர்.
No comments