வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் மாற்றுத்திறனாளி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் மாற்றுத்திறனாளி, உதவித்தொகையும் முறையாக கிடைக்கவில்லை, வெல்டிங் தொழில் தெரிந்தும் பொருளாதாரம் இல்லை, வங்கி கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் ராஜூவ்புரம் பகுதியை சேர்ந்தவர் 40 வயதுடைய மாற்றுத்திறனாளி இளைஞர் கோதண்டபாணி இவர் தனது ஏழ்மை நிலை காரணமாக சிறு வயதிலேயே வெல்டிங் தொழில் கற்றுக்கொண்டு தற்பொழுது வெல்டிங் வேலை செய்து வருகிறார் சுமார் 75% பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி இவருக்கு அரசால் மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூபாய் 2000 வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த உதவித்தொகையும் வழங்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டது இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்த மாற்றுத்திறனாளி கோதண்டபாணி கடந்த மார்ச் மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு நேரில் சென்று தனது உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கோரிக்கை மனு அளித்திருந்தார் இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையின் பெயரில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் மாற்றுத்திறனாளி கோதண்டபாணி வங்கி கணக்கிற்கு ரூபாய் 7500 வரவு வைக்கப்பட்டுள்ளது ஆனால் தனக்கு முழுமையான உதவித்தொகை வந்து சேரவில்லை எனவும் தனக்கு கிடைக்க வேண்டிய முழு உதவித்தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் மாற்றுத்திறனாளியான தனக்கு வெல்டிங் தொழில் தெரிந்தும் பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும் மாற்றுத்திறனாளி மற்றும் வாழ்வாதாரம் இல்லாத காரணத்தினால் இதுவரை திருமணம் நடைபெறாத நிலையில் வாழ்ந்து வருவதாகவும் எனவே தனக்கு வங்கி கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மாற்றுத்திறனாளியான நிலையிலும் விடா முயற்சி மன உறுதியுடன் தினமும் வெல்டிங் வேலை பார்த்து வரும் கோதண்டபாணிக்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments