Breaking News

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் மீட்க கோரி மனு அளித்த மீனவர்கள்.


மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த இருபதாம் தேதி இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையாள் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மீனவ பஞ்சாயத்தார்கள் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களின் உறவினர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக மீட்க கோரி  கோரிக்கை மனுவினை அளித்தனர் அப்பொழுது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் உடன் இருந்தார். 

No comments

Copying is disabled on this page!