ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அருந்தியர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு.
முதல்வர் அவர்கள் ஆறு தாலுகாவுக்கும் வாலாஜாபேட்டை தலைமை இடமாக கொண்டு ஆதி திராவிட தனிவட்டாட்சியர் அலுவலகம் ஒன்றே செயல்படுவதால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாலும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது அதனால் அரக்கோணம் சோளிங்கர் ஆகிய மூன்று வருவாய் ஓட்டங்களை கொண்டு அரக்கோணத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகம் உருவாக்கினால் பொது மக்களுக்கு சிரமங்கள் குறையும்.. சோளிங்கர் வட்டத்தில் உள்ள அருந்ததியர் மக்களின் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத உள்ள குறைகளை தாங்கள் நேரில் ஆய்வு செய்து தீர்க்கப்பட வேண்டும். ஜம்பு குளம் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் இறந்தவரின் சடலத்தை புதைத்து வந்தார்கள் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் மயானம் நிலம் எடுக்கப்பட்டுள்ளது மயானம் இல்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளை எடுத்து கூறி தீர்க்கும் வகையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உள்ளது இந்தக் குழுவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சமூகத் தலைவர்களையோ சமுதாய ஆர்வலர்களையோ மாவட்ட ஆட்சித் தலைவர் நியமனம் செய்யப்பட்ட வருகின்றனர்.
ஆனால் கடந்த குழு உறுப்பினர்கள் நியமத்து நியமனத்தில் ஒரே ஒரு அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை புது பாட்டு நியமனம் செய்யப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது.. இனிவரும் காலங்களில் ஆதிராவிடர் நலக்குழுவில் அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் செய்யுமாறு கோருகிறோம்.
தாழனூர் சத்திரம் கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கோரிக்கை நிறைவேற்ற இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளதில் மீதமுள்ள வீட்டுமனை பட்டாக்களில் ஆக்கிரமம் செய்யப்பட்டுள்ளதை அகர்த்தி சரியான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநிலத் தலைவர் வரதராஜன் தலைமையில் மனு அளித்தனர்
No comments