குத்தாலம் காவல் நிலையம் சார்பில் பெட்டிஷன் மேளா; பல்வேறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட ஏராளமான புகார்தாரர்கள் மனுக்களை அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலையம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் குத்தாலம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தீர்வு காணப்படாத தங்களது நீண்ட நாள் குறைகளுக்கு மனு அளித்து உடனடி தீர்வு கிடைக்கப் பெற்றனர்.
இந்த நிகழ்வில் குத்தாலம் காவல் ஆய்வாளர் ஜோதிராமன் தலைமையில் போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய தீர்வு எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments