பொதுமக்கள் ஆர்வமுடன் களிமண் சிலைகளையும், பூஜை பொருட்களை வாங்கி சென்றதால் கூட்டம் அலைமோதியது.
பொன்னேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட பொதுமக்கள் ஆர்வமுடன் களிமண் சிலைகளையும், பூஜை பொருட்களை வாங்கி சென்றதால் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரம்.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காலை முதலை பொதுமக்கள் களிமண் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். சிலை தயாரிப்பாளர்கள் களிமண்ணை அச்சில் அடித்து வண்ணம் தீட்டி தருவதை ஆர்வமுடன் வந்து வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.
மேலும் பல வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகளையும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் குடை, வாழை இலை, கரும்பு, வாழைக்கன்று, பழங்கள் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்களையும் பொதுமக்கள் சந்தையில் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்துடன் களிமண் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வதால் பொன்னேரி சந்தையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments