தெக்குப்பட்டு ஊராட்சியில் நீர் ஒடையில் அனுமதியின்றி மண் கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? மாவட்ட ஆட்சியர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா தெக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள அன்னைக்கள் ஏரி (என்று அழைக்கப்படும் நீர் ஓடை) அரசு வருவாய் கணக்கில் ஏரி என்று குறிப்பிடவில்லை 1972ல் அப்பகுதி விவசாயிகள் குப்புசாமி, தங்கம்மா, பெரியண்ணன் மந்திரி இவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பொதுப்பணி துறை சார்பில் கசிவு நீர் தேக்கம் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் 8.60 ஏக்கர் கொண்ட மேச்சல் புறம்போக்கு இடம் உள்ளது.
சர்வே எண் 166 ஓடை புறம்போக்கு இடம் கடந்த வருடம் ஊராட்சியின் சார்பில் பண்ணை குட்டை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வெட்டப்பட்டு உள்ளது. மேலும் தற்போது வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள பணியாளர்கள் நீர் ஒடையில் தூர் வாரி வருகின்றனர். கடந்த 20/9/2024 அன்று நாட்றம்பள்ளி வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு அனுமதி வழங்கி உள்ளார். சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதால் பண்ணக்குட்டை காணவில்லை!
No comments