நாட்றம்பள்ளி பேரூராட்சியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய பவர் பிளாக் சாலை பூமி பூஜை.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் இன்று காலை பேரூராட்சி மன்ற தலைவர் சசிகலாசூரியகுமார் தலைமையில் சுமார் 2 கிலோ மீட்டர் அளவில் பேவர் பிளாக் ரோடு அமைக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இன்று 2 வது வார்டு
சின்னசாமி தெரு வீராகன் வட்டம் பகுதியில் சாலை அமைக்க பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சியில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் மாவட்ட சேர்மன் நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.கே.ஆர் சூரியகுமார்
கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஆசிரியர் தனபால், பேரூராட்சி கழக பொருளாளர் கதிர்வேல் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments