திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி பகுதியில் 30 லட்சம் மதிப்பிலான கூடுதல் பள்ளிக்கட்டித்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் எண்ணிக்தொகை அதிகரித்து உள்ளதால் வகுப்றைகள் போதிய இடமின்றி சிரமம்படுவதாக மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசரிடம் கூடுதல் வகுப்பறைகள் கட்டி தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பரிசீலனை செய்த சட்டமன்ற உறுப்பினர் நாசர் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக நிதி வழங்கினார். அதனை தொடர்ந்து கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாடடிற்காக சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து ஆவடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட மகளிருகளுக்கான 6 குழுக்களை சார்ந்த 120 பேருக்கு ரூபாய் 1 கோடி 7 லட்சத்து 30 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில்புரிவதற்கான காசோலைகளை சட்டமன்ற உறுப்பினர் நாசர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் என்.இ.கே மூர்த்தி, உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
No comments