பேரணாம்பட்டு பத்தல பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தல பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக கடந்த13 ஆண்டுகளாக பணி செய்து வருபவர் பொன். வள்ளுவன் அவர்கள் 1996 இல் பணியில் சேர்ந்தவர் பணியில் சேர்ந்த முதல் காலம் கொண்டு கல்விப் பணியிலும் சமூகப் பணியிலும் நாட்டம் கொண்டுள்ளதாகவும் பள்ளிகள் அல்லாத ஊர்களில் பள்ளிகளை உருவாக்கியவர் அதன்படி சிவராஜ் நகர், கொண்டமல்லி, கோட்டை காலனி, தரைக்காடு ஆகிய 5 ஊராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செல்வதில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து சென்று அந்தக் குழந்தைகள் பாதுகாப்புடன் படிப்பதற்காக அவர்கள் வசிக்கும் குடியிருப்பிலேயே ஐந்து துவக்கப் பள்ளிகளை உருவாக்குவதற்காக கருத்துக்களை அனுப்பி இப்பள்ளிகள் வர காரணமாக இருந்தவர் என்றும் தற்போது பணிபுரிந்து வரும் பத்தல பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார் பள்ளிகளின் உட் கட்டமைப்புகள் மேம்படுத்தியதற்காக 2014 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருதை குடியரசு தின விழாவில் பெற்றுள்ளார் 2018 ஆம் ஆண்டில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது ரூபாய் 25.000 பெற்றுள்ளார்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பெ. பகலவன் அவர்கள் மூலமாக ரூபாய் 1 லட்சம் மதிப்பில் நூலகம் உருவாக்கியதாகவும், அரசு வழங்கிய நிதியுடன் தனது சொந்த நிதி ரூபாய் 65.000 பயன்படுத்தி நவீன கழிப்பறையை உருவாக்கி தூய்மை பள்ளிக்கான விருது அரசிடம் பெற்றுள்ளார், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பாக பணியாற்றியதற்காக தேசிய விருதினை பெற்றுள்ளார்.
மாணவர்களின் அறிவுரையை மேம்படுத்த தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து ரூபாய் 1 லட்சம் மதிப்பில் இரண்டு ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி பெட்டியினை மாணவர்களுக்காக வழங்கி உள்ளார், தமிழக முதல்வரின் கனவு திட்டமான நம்ம பள்ளி பவுண்டேஷன் திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் விழா அரங்கம் அமைத்து ரூபாய் 3 லட்சம் செலுத்தி மேடை அமைத்து பணி செய்து வருகிறார்
ரூபாய் 65 ஆயிரம் செலுத்தி மழைநீர் உட்கண்ட உட்கட்டமைப்பு ஏற்படுத்தி பள்ளி மேலாண்மை குழு மூலம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் நியமித்து கடந்த ஆண்டு ரூபாய் 84.000 வழங்கி உள்ளார் பள்ளி மேலாண்மை குழு மூலமாக முன்னாள் பள்ளி மாணவர் வெ. சிட்டி பாபு உதவியாள் பள்ளிக்கு பாதுகாப்பு கேமராக்கள் ஒலிபெருக்கி மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரிக்க நவீன குப்பை குடைகள் நிழல் பந்தல் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பாடு உபகரண பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள் எழுது பொருட்கள் பரிசுப் பொருட்கள் என பல லட்சம் ரூபாய் உதவியைப் பெற்று மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கி உள்ளார்.
நரிக்குறவர் மாணவர்களின் சிதிலமடைந்த வீடுகளை புதிதாக கட்டிக் கொடுக்க ரோட்டரி சங்கம் மூலம் முயற்சி மேற்கொண்டு அரசின் மூலம் கட்டிக் கொடுக்க முயற்சி செய்து உள்ளார் இன்னும் பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு இன்னும் பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வரும் பத்தல பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவனுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி கௌரவித்தார்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments