நிதி இழப்பு செய்த பாஜகவை சேர்ந்த தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவரை பதவிலிருந்து நீக்கி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்,
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவராக பாஜக மாநில பட்டியலின செயற்குழு உறுப்பினர் நிர்வாகி பி.வெங்கடேசன் செயல்பட்டு வருகிறார்.
இவர் ஊராட்சிக்கு நிதி இழப்பு செய்தும் சட்ட விதிமுறைகள் மிறி தன்னிச்சையாக செயல்பட்டது நிரூபணம் ஆனதால் அவர் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் மேலும் நிதி இழப்பு செய்தும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார் என்பதால் அவரை ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 205 படி திருவள்ளுர் ஊராக வளர்ச்சி ஆய்வாளர் ஆய்வு செய்ததின் அடிப்படையில் அவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளர்.
No comments